பூமியின் உயிரினத் தொகுதியில் மனிதன் 0.01 வீதம் மாத்திரமே

பூமியின் உயிரினத் தொகுதியில் தாவரங்கள் 80 வீதமாக இருப்பதோடு மனிதன் 0.01 வீதம் மாத்திரமே உள்ளதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. இதில் பக்டீரியா 13 வீதமாகவும், பூஞ்சை 2 வீதமாகவும் உள்ளது.

“உயிரினத் தொகுதியில் விலங்குகளை விட பூஞ்சை அதிகமாக உள்ளது என்பதே உண்மையாகும்” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஹார்வார்ட் பரிணாம உயிரியல் நிபுணர் ஜேம்ஸ் ஹன்கன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 7.6 பில்லியன் எண்ணிக்கையை கொண்ட மனிதன் ஒப்பீட்டளவில் பூமியில் மிக மிகச் சிறியதாகவே உள்ளான். நாகரிகம் ஆரம்பமானது தொடக்கம் மனிதன் பூமியில் தாவரங்களின் மொத்த எடையை பாதியாக குறைத்திருப்பதோடு காட்டு விலங்குகளின் எண்ணிகையை 85 வீதமாக குறைத்துள்ளான் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வளர்ப்பு விளங்குகள் தற்போது காட்டு விலங்குகளை விடவும் அதிகரித்திருப்பதோடு கோழிகளின் எடை அனைத்து பறவைகளின் எடையை விடவும் மும்மடங்காகியுள்ளது. காலநிலை மற்றும் புவியியல் மாற்றங்களில் இந்த இலக்கங்கள் தாக்கம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது. 

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019