தூத்துக்குடி படுகொலைகள்- தைவானில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து தைவானில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகள் உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தமிழர்கள் வாழும் நாடுகளில் இப்படுகொலையைக் கண்டித்து கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடியில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அறவழியில் போராடிய தூத்துக்குடி மாநகரப் பொது மக்களின் மீது தமிழக காவல்துறையினரின் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தை கண்டித்து தைவான் தமிழ்ச்சங்கத்தினரால் ஷிஞ்சு நகரில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.

தைவானில் உள்ள ஷிஞ்சு நகரத்தில் உள்ள பூங்காவில் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சங்கத்தின் துணைத்தலைவர் ரமேசு பரமசிவம் தலைமையில் நடைபெற்ற கண்டன கூட்டத்திற்கு தைவானின் பல்வேறு நகரத்தில் இருந்து தமிழ்மக்கள் வந்து கலந்து கொண்டு தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் அறப்போராட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமை.அவர்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. இந்த உயர்ப்பலி நிச்சயம் தவிர்த்திருக்கக் கூடிய ஒன்று. இந்த போராட்டத்தின் போது உயிர் இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும், தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

காவல் துறையின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பலியாகிய அப்பாவி பொதுமக்கள் 13 பேருக்கும் தைவான் தமிழ்ச்சங்கத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கும்படி மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இத்தருணத்தில் மீண்டும் ஒரு முறை தைவான் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.


Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018