தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்தார் முதல்வர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்தார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. முதல் நாளான இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

ஆனால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவேண்டும் என்பதற்காக, தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், அதனை சபாநாயகர் நிராகரித்தார்.

இதனை ஏற்க மறுத்த  தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடியில் 22-ம் தேதி நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார். 

‘144 தடை உத்தரவை மீறி சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் சட்டம் ஒழுங்கிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்  போராட்டம் நடத்தின.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அமைதி நிலவ பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது, யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாக கூடாது” என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Ninaivil

திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018