துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னால் அரசுக்கு கோபம் வருகிறது- டிடிவி தினகரன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னாலே அரசுக்கு கோபம் வருகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும். இந்த கூட்டத் தொடரின்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசப்பட்டது.

அப்போது முதல்வர் ஒரு நீண்ட அறிக்கையை வாசித்து தூத்துக்குடி மக்களை சில அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து திமுக வெளிநடப்பு செய்தது.டிடிவி தினகரன் சட்டசபைக்கு வெளியே பேசுகையில் சமூக விரோதிகள் நுழைந்ததை பார்க்காமல் தூங்கிவிட்டது அரசு.

துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொன்னாலே அரசுக்கு கோபம் வருகிறது. மக்கள் இடத்திலிருந்துதானே எதையும் சொல்ல வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டை படுகொலை என்று சொல்லாமல் எல்லாரும் கண்ணை மூடி படுத்துக் கிடக்கின்றனர் என்றா சொல்ல முடியும், சமூக விரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது.

காவல்துறை துணையின்றி அமைச்சர்கள் தூத்துக்குடிக்கு போக முடியுமா. புகைப்படங்களை காட்டி முதல்வர் ஷோ காட்டி வருகிறார். ஜெயலலிதா வழியில் ஆட்சி என்று கூற அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.

ஜெயலலிதா இருந்திருந்தால் 13 பேர் பலியாகியிருந்திருப்பரா. ஆலையை மூடி ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நாங்கள் அசந்திருந்த நேரம் பார்த்து டிடிவி ஜெயித்துவிட்டார் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.

அதன்படி இந்த காவல் துறை அசந்திருந்ததா. துப்பாக்கிச் சூட்டுக்கு அரசின் இயலாமையே காரணம். போராட்டத்துக்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலையை மூடி இருக்க வேண்டியதுதானே. 13 பேரை காவி வாங்கிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுகின்றனர் என்று தினகரன் தெரிவித்தார்.


Ninaivil

திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
யாழ். சங்கானை
அவுஸ்திரேலியா
19 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 21, 2018
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018