தமிழ் நாடு பொலிஸாருக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவல்? சுப்பிரமணியன் சுவாமி

ஸ்டர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் பங்கு முக்கியமானது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு கிடைத்த தகவலின்படி தமிழக பொலிஸார் மத்தியிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை இந்தியாவிலிருந்து இயங்கும் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்ததுபோலவே இந்தப் போராட்டத்தின்போது விடுதலைப் புலிகள் ஊடுருவியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தைக் கூர்ந்து கவனித்து வரும் சுவாமி, ”ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்தது போலவே இப்போது நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் இருந்துள்ளது. அவர்களே வன்முறையை தூண்டியவர்கள். இதுவே பின்னர் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை தோற்றுவித்துள்ளது” என்றார்.

போலிசாருக்கு ஆதரவாக பேசிய மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய குற்றவியல் சட்டபிரிவு 144இன் கீழ் தூத்துக்குடியில் வன்முறையை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் எதிர்க்கட்சியினரும் சில சமூக விரோத சக்திகளும் அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து கெட்ட பெயரை ஏற்படுத்த முயன்றன என்றார்.

ஸ்டெர்லைட் வன்முறைகள் ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில் இந்த வன்முறைகளுக்குப் பின்புலமாக இருந்த அரசியல் குறித்து சுப்பிரமணியன் சுவாமி சில கேள்விகளை எழுப்புவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தொண்ணூற்றி ஒன்பது நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் நூறாவது நாளன்று திடீரென வன்முறை கலவரமாக மாற்றப்பட்டது எப்படி? ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடுவதாக திட்டமிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஏன் அங்கு நிற்கவில்லை? 144 பிரிவு மீறலுக்காக போலீசார் முதலிலேயே ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை? கூட்டம் வன்முறையில் இறங்கியதும் போலீசார் போராட்டக்காரர்களைக் குறி பார்த்து சுட்டனர். இதற்கு முன்பு தண்ணீரைப் பீய்ச்சி போலீசார் ஏன் கூட்டத்தைக் கலைக்கவில்லை? துப்பாக்கி சூட்டின் போது போலீசார் ஏன் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தவில்லை?

எனக்கு கிடைத்த தகவலின்படி போலீசார் மத்தியிலும் விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டேர்லைட் நிறுவனம் 1990களின் மத்தியில் தொடங்கப்பட்டது முதல் அதன் முக்கிய தருணங்களில் காங்கிரஸ் ஆட்சியே மத்தியில் நடந்துள்ளது. அவ்வாறு இருக்க இப்போது தூத்துக்குடியில் நடந்த வன்முறைக்கு மட்டும் காங்கிரசார் பிரதமர் மோடியை குற்றம் சாட்டுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்? என சுப்பிரமணியன் சுவாமி கடுமையாகச் சாடினார்.

இதேவேளை சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நீதிமன்றமும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டதாகவும், ஆனால் காங்கிரஸ் அமைப்பினர் மோடி அரசாங்கத்தையே குறைகூறாமல் உண்மையில் நடந்தது என்ன என்பதுகுறித்து ஆராயவேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2013இல் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டபோது உச்ச நீதிமன்றம் நுறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தேவையான அனுமதிகள் கிடைக்காத நிலையில் அந்த நிறுவனம் அங்கு தொடர்ந்து தொழில்சாலையை நடத்துவதற்கு சிரமப்பட்டது.

அதே வருடம் தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நச்சுத் தன்மை மிகுந்த கந்தக அமிலக் கசிவைக் காரணம் காட்டி தொழில் சாலையை தொடர்ந்து நடத்த அனுமதி தர மறுத்துவிட்டது. ஆக மோடியை காங்கிரசார் குற்றம் சாட்டாமல் தூத்துக்குடியில் உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டறியும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

எவ்வாறாயினும் இருந்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம் என்ற தோரணையில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தின் எந்தவொரு பிரச்சினைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளையே முடிச்சுப்போடுவது தெரிந்ததே.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுப்பிரமணியன் சுவாமிக்கு இயல்பாகவே இருக்கின்ற காழ்ப்புணர்வினாலும் தமிழ் மக்கள் மீது இருக்கின்ற வெறுப்புணர்வினாலும் இப்படி மன நோயாளிபோல் உளறித்திரிவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019