தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது- தூத்துக்குடியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்து இருந்தது. இயல்பாக பெய்ய வேண்டிய மழை 321 மி.மீ. ஆனால் கடந்த ஆண்டு 414 மி.மீ. மழை பெய்தது.

இந்த ஆண்டு நேற்று தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொடங்கி உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டி பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அது மியான்மரை நோக்கி நகர்ந்து செல்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டது. பலத்த சூறைக்காற்றும் வீசியது. கடல் சீற்றத்தால் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் சிலவற்றின் நங்கூரம் அறுந்ததால் படகுகள் தரை தட்டின.

குமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, பூத்துறை போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் தடுப்பு சுவரையும் கடந்து ஊருக்குள் புகுந்தது. இதனால் மார்த்தாண்டன்துறை கிராமத்தில் கடற்கரையில் உள்ள ஆலயத்தின் கொடிமர பீடம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. 

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019