டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு- ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்

கிரிக்கெட் போட்டியில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்வது, யார் முதலில் பந்து வீசுவது என்பது ‘டாஸ்’ போட்டு தீர்மானம் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது உள்நாட்டு அணி கேப்டன் நாணயத்தை மேலே சுண்டி விட்டு பூவா? தலையா? என்று எதிரணி கேப்டனிடம் கேட்பார். அவற்றில் இரண்டில் ஒன்றை எதிரணி கேப்டன் சொல்வார்.

‘டாசில்’ எந்த அணி கேப்டன் ஜெயிக்கிறாரோ? அவர் தான் யார் முதலில் பேட்டிங் செய்வது அல்லது யார் முதலில் பவுலிங் செய்வது என்பதை முடிவு செய்வார். டெஸ்ட் போட்டியில் டாஸ் போடும் முறையை ஒழிக்கலாமா? என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆலோசனை செய்து வந்தது.

இந்த நிலையில் மும்பையில் கும்பிளே தலைமையில் நேற்று நடந்த ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில், ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை வழக்கம் போல் தொடருவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் வீரர்கள் நடத்தை விதிமுறையை மீறினாலோ? பந்தை சேதப்படுத்துதல் போன்ற தவறான செயலில் ஈடுபட்டாலோ? தண்டனையை அதிகப்படுத்த வேண்டும்’ என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

அத்துடன் வீரர்கள் நடத்தை விதிமுறையில் சில திருத்தங்கள் கொண்டு வரவும், ஆடுகளம் (பிட்ச்) பந்து வீச்சு மற்றும் பேட்டிங்குக்கு சம அளவில் கைகொடுக்கும் வகையில் தயாரிக்க வேண்டும்.

போட்டி நடுவர்களுக்கு தண்டனை வழங்குவதில் கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது என்பது உள்பட பல்வேறு சிபாரிசுகளை கிரிக்கெட் கமிட்டி ஐ.சி.சி.க்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த சிபாரிசுகள் குறித்து ஐ.சி.சி. செயற்குழுவில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018