மத்திய அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்- சந்திரபாபு நாயுடு

தெலுங்கானா மாநிலம் தனிமாநிலம் ஆனதால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் அதை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.

இதற்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சபை நடைபெற முடியாதபடி தினமும் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. பா.ஜானதாவை கடுமையாக எதிர்த்து வரும் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மாநாடு விஜயவாடாவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு தேசம் தலைவரும், முதல்- மந்திரியுமான சந்திரபாபு நாயுடு மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

ஆந்திராவின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது. தலைநகர் அமராவதியில் இருந்து வருமானவரி, சொத்து வரி, ஜி.எஸ்.டி வரி என மிகப்பெரிய அளவில் வரி வசூலாகி மத்திய அரசுக்கு செல்கிறது.ஆனால் மத்திய அரசு புதிய தலைநகரை உருவாக்க போதுமான நிதி வழங்க மறுத்து வருகிறது. ஆந்திராவுக்கு உலக தரத்திலான புதிய தலைநகர் தேவைப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத்தில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

கர்நாடகத்துக்கு பெங்களூரில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஏன் ஆந்திரா மட்டும் தலைநகரை உருவாக்ககூடாது.

குஜராத்தில் ‘தேலேரா’ என்ற நகரை ஸ்மார்ட் சிட்டியாக ரூ.95,000 கோடி செலவில் மாற்றி வருகிறது. அதற்கு நிதி தேவைப்படுகிறது. அதனால் அமராவதிக்கு நிதி மறுக்கப்படுகிறது. அவர்கள் மட்டும் தேலேராவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றலாம். நாம் அமராவதியை உருவாக்க கூடாதா?

ஆந்திராவை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும். ஆந்திர அரசு தனது நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் ஒட்டு மொத்தமாக அமராவதி கட்டுமான பணிக்கு ஒதுக்குவதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுவது தவறு. அமராவதியின் வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் பயன் அளிக்கும்.

அமராவதியில் உள்கட்டமைப்புகள் செய்து வருகிறோம். சாலைகள், கழிவு நீர் கால்வாய், மின்சாரம், குடிநீர், குடியிருப்புகள் கட்டப்படுகின்றனர். அமராவதி நகரம் வளர்ச்சி அடைந்தது வருமானம் பெருமளவில் கிடைக்கும். இது மாநிலத்தின் மற்ற வளர்ச்சி பணிகளுக்கு பயன் அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018