பெட்ரோல், டீசல் விலையில் ஒரு பைசா குறைப்பதுதான் உங்கள் யோசனையா? : பிரதமர் மோடி மீது ராகுல் கடும் தாக்கு

பெட்ரோல், டீசல் விலையில் ஒரு பைசா குறைப்பதுதான் உங்கள் யோசனையா? என்று பிரதமர் மோடி மீது ராகுல் கடுமையாக  தாக்கியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்கள் நிறுத்தி  வைக்கப்பட்ட விலையேற்றம், தேர்தல் முடிந்ததும் தினமும் ஏறி வருகிறது.

 சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.42, டீசல் ரூ.73.17க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது 16 நாள் கிட்டதட்ட ரூ.4 விலை  உயர்ந்த பின் நேற்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைந்தது. ரூபாய் கணக்கில் தினமும் விலை ஏறி, ஒரு பைசா மட்டுமே குறைந்துள்ளதை  சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அன்புள்ள பிரதமருக்கு, இன்று பெட்ரோல், டீசல்  விலையை ஒரு பைசா குறைத்துள்ளீர்கள்.

ஒரு பைசா? இது தான் உங்களின் குறும்பு யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது மற்றும்  மோசமான சுவை கொண்டது. பின்குறிப்பு:- ஒரு பைசா விலை குறைப்பு என்பது கடந்த வாரம் நான் விடுத்த சவாலுக்கு சரியான எதிர்வினை அல்ல  இவ்வாறு பதிவிட்டுள்ளார்

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018