ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜூலை 3 வரை ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்யக் கூடாது - டெல்லி ஐகோர்ட்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி  சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு மே 31-ம் தேதி (இன்று) ஆஜராகும்படி ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது. எனவே, தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் நேற்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டிய சூழ்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மனுவை பரிசீலித்த ஐகோர்ட், ஜூலை 3-ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ப.சிதம்பரம் மனுவிற்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தது.

இதேபோல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூன் 5-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019