புரோ கபடி லீக்: இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1 கோடிக்கு ஏலம்!

புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1.51 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் இருந்து 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்தாண்டுக்கான 6வது புரோ கபடி லீக் போட்டி வரும் அக்டோபர் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிலையில், இந்த சீசனுக்கான லீக் போட்டிக்கான வீரர்களுக்குரிய ஏலம் மும்பையில் நடந்தது. இதில், ஒவ்வொரு அணியும் 18 முதல் 25 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். வீரர்களின் ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும், ரூ.4 கோடி வரை செலவிட முடியும். 

ஒரு சில வீரர்கள்ஏற்கனவேதக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. ஏலப்பட்டியலில் 422 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டில் எப்பொழுதும் இல்லாத வகையில் 6 வீரர்கள் ரூ.1 கோடி மற்றும் அதற்கும் மேலாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சீசனின் போது பாட்னா பைரட்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் மோனு கோயத்தை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ரூ.1.51 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் ராகுல் சவுத்ரியை தெலுங்கு டைட்டன்ஸ் அணி ரூ.1.29 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

இதே போன்று, தீபக் ஹூடாவை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ரூ.1.15 கோடிக்கும், நிதின் தோமரை புனேரி பால்டன் அணி ரூ.1.15 கோடிக்கும் வாங்கியுள்ளது. ரிஷாங் தேவாதிகாவை உபி யோத்தா அணி ரூ.1.11 கோடிக்கும், ஈரான் வீரர் பாசெல் அட்ராசாலியை ரூ.1 கோடிக்கு மும்பை அணியும் வாங்கியுள்ளது.

Ninaivil

திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018