கடலூர் மாவட்டம், பெரியாண்டிக்குழி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி ஜெகன் தீக்குளிப்பு!

80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அவரது இழப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அதிர்ச்சியையும் அளவுகடந்த துயரத்தையும் அளிக்கிறது.

அவருக்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சுற்றத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

பொய்வழக்கில் கைது செய்து, சிறையிலடைத்து, உடல்நலம் குன்றியதால் மருத்துவமனை ஐசியுவில் இருந்த நிலையிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை, மீண்டும் ஒரு பொய்வழக்கில் கைது செய்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமலேயே ஜெகன் தீக்குளிப்பு!

நம்மைத் தாக்கும் எந்த நிலையானாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட முடிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் யாரும் எடுக்கக் கூடாது என்று கையெடுத்துக் கும்பிட்டு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், குண்டடிபட்டோரை விசாரிக்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்களை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி சிறைவைத்து, மறுநாள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டதான பொய்வழக்கில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இதனால் உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டிருந்த அவர் நான்காம் நாளில் உடல்நலம் குன்றியதால் ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஐசியுவில் இருந்த நிலையிலேயே மீண்டும் ஒரு பொய்வழக்கில் அவரைக் கைது செய்து புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைவர், "மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து அறவழியில் நான் போராடிவந்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக அமைதியான வழியில் என்எல்சி முற்றுகைப் போராட்டத்தை நடத்தினேன்.

போராட்டத்தை நடத்தியதற்காக என் மேல் தேச துரோக வழக்குப் பதிவு செய்து, நான் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கும் உள்ளான நிலையிலும், கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தபோதே கைது செய்துள்ளனர்.

முன்னதாக, தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வடநாட்டுக் காவல் துறை அதிகாரிகள்தான் இந்தப் படுகொலையை செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன்.

இதனால் என் மீது தனிப்பட்ட முறையில் ஆத்திரம் கொண்ட வடநாட்டைச் சேர்ந்த மதுரை வடக்கு மண்டல ஐஜி தூண்டுதலால் என்னைக் கைது செய்து, தூத்துக்குடியில் பாழடைந்த மண்டபத்தில் அடைத்து தண்ணீர் தராமல், உணவு தராமல், மின்விசிறி வசதி செய்து கொடுக்காமல் மோசமாக நடந்துகொண்டார்கள்.

அதன்பிறகு என்னை வாகனத்தில் அழைத்துக் கொண்டு வழியில் எங்கேயும் நிறுத்தாமல் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல், திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர். இது மனித உரிமை மீறிய செயலாகும்" என்று கண்டனம் தெரிவித்தார்.

"மருத்துவமனையில் நேற்று என்னைக் கைது செய்த காரணத்தால் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. மருந்து அருந்த முடியவில்லை. எனக்குப் போடப்பட்ட டிரிப்பையும் அகற்றி விட்டேன். உணவு அருந்தாததாலும், சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலும் என் உடல் சோர்ந்து விட்டது.

என்னுடைய உண்ணா விரதப் போராட்டம் தொடர்கிறது. மருத்துவமனையில் நான் சிகிச்சையில் இருக்கும்போது என்னைக் கைது செய்து வெளியேற்றக் கூடாது. ஆனால் இங்குள்ள டீனுக்கு மத்திய மாநில அரசுகள் அழுத்தம் கொடுத்து நூற்றுக்கணக்கான காவல் துறையை ஐசியுவுக்கே அனுப்பி என்னைக் கட்டாயமாக கைது செய்துள்ளனர்" என்று குற்றம்சாட்டினார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்.

திட்டமிட்டுத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பழிவாங்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஈடாகத் துன்புறுத்தப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாத மன உளைச்சலில்தான் கடலூர் மாவட்டம், பெரியாண்டிக்குழி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி ஜெகன் தீக்குளித்திருக்கிறார்.

80 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

அவரது இழப்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அதிர்ச்சியையும் அளவுகடந்த துயரத்தையும் அளிக்கிறது.

அவருக்கும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சுற்றத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

நம்மைத் தாக்கும் எந்த நிலையானாலும் அதனை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட முடிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் யாரும் எடுக்கக் கூடாது என்று கையெடுத்துக் கும்பிட்டு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

Ninaivil

திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018