மேற்கிந்தியதீவு அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை முன்னிலை

மேற்கிந்திய தீவுகளுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கரீபியன் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியுடன் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் விளையாடுகின்றது.

ட்ரினிடாடின் பிரேன் லாரா கிரிக்கெட் அரங்கில் இலங்கை நேரப்படி நேற்றுமுன்தினம் (30) மாலை 7.30 மணியளவில் ஆரம்பமான இந்த பயிற்சிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டார்.

இதன்படி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இலங்கை அணி குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோருடன் தொடங்கியிருந்தது.

போட்டியின் முதல் பந்தினை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் மேற்கிந்திய தீவுகளின் மிகேல் கம்மின்ஸ் வேகத்தினை தாக்குப் பிடிக்க முடியாமல் போல்ட் செய்யப்பட்டிருந்தார். இதனால், விருந்தினர் இலங்கை அணி விக்கெட் ஒன்றுடன் தமது சுற்றுப் பயணத்தினை ஆரம்பம் செய்திருந்தது.

தொடர்ந்து துடுப்பாட்ட வீரராக இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் களம் நுழைந்தார். சந்திமால் குசல் பெரேராவுடன் கைகோர்த்து ஆறுதலான முறையில் அணிக்கு ஓட்டங்கள் சேர்க்க தொடங்கியிருந்ததுடன், பெறுமதி தரும் இணைப்பாட்டம் ஒன்றினையும் உருவாக்கியிருந்தார். இதில் இலங்கை அணிக்காக இரண்டு வருடங்களின் பின்னர் இந்த சுற்றுப் பயணம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கும் குசல் பெரேரா, அரைச்சதம் தாண்டியிருந்தார்.

பின்னர், இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட் முதல் நாளின் மதிய போசணத்திற்கு பின்னர் வீழ்ந்தது. இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட்டாக ஓய்வறை நடந்த குசல் பெரேரா 93 பந்துகளை எதிர்கொண்டு 10 பெளண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 65 ஓட்டங்களினைப் பெற்றிருந்ததோடு இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 130 ஓட்டங்களினையும் சந்திமாலுடன் பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து சந்திமால், புதிய துடுப்பாட்ட வீரரான அஞ்சலோ மெதிவ்ஸ் உடன் இணைந்து அணிக்கு ஓட்டங்கள் சேர்க்கும் பணியினை அரைச்சதம் ஒன்றை தாண்டியவாறு முன்னெடுத்தார். இரண்டு வீரர்களும் பொறுமையாக ஆடி வலுவான இணைப்பாட்டம் (114) ஒன்றினைப் பெற்றனர்.

இந்த இணைப்பாட்டத்திற்குள் இலங்கை அணியின் தலைவரான சந்திமால், தனது 21 ஆவது முதல்தர சதத்தினையும் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், சந்திமாலின் விக்கெட் அவர் சதம் கடந்து சிறிது நேரத்திலேயே மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் ரெய்மன் ரெபரிடம் பறிபோயிருந்தது. ஆட்டமிழக்கும் போது சந்திமால் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

சந்திமாலினை அடுத்து அஞ்சலோ மெதிவ்ஸ் உம் 41 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார். நான்கு மாத இடைவெளியின் பின்னர் இலங்கை அணிக்குத் திரும்பியிருக்கும் மெதிவ்ஸ் வழமையான துடுப்பாட்ட நிலைக்கு (Form) திரும்பி இருப்பதனை அவர் பெற்ற இந்த ஓட்டங்கள் காட்டி இருந்தது.

தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை அணி குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்திருந்ததுடன், இலங்கையின் ஆறாவது விக்கெட்டோடு பயிற்சி ஆட்டத்தின் முதல் நாளும் நிறைவுக்கு வந்தது. இதன்படி, இந்தப் பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 89.1 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. நிரோஷன் திக்வெல்ல 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நிற்கின்றார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் பந்துவீச்சு சார்பாக ஜொமேல் வொர்ரிகன் மற்றும் ரஹ்கீம் கொன்வால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018