அ.தி.மு.க.வுடன் உடன்பட்டு அரசியல் நடத்தும் நிலை தி.மு.க.வுக்கு வராது- கனிமொழி

திருவாரூரில் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கனிமொழி எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

பின்னர் அவர் காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தவிதமான ரகசிய உடன்பாடும் இல்லை. அவ்வாறு இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அவரது கற்பனை வளத்தை காட்டுகிறது. அவர் நல்ல கதை எழுத போகலாம். அ.தி.மு.க.வுடன் உடன்பட்டு அரசியல் நடத்தக்கூடிய நிலை தி.மு.க.வுக்கு என்றுமே வராது.சட்டமன்றத்தில் தி.மு.க. வின் பங்களிப்பை பலமுறை பார்த்திருக்கிறோம். தலைவர் கலைஞர் அரசாங்கத்தையே நடுங்க வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறார். ஆனால் சட்டமன்றத்தை நடத்தும் விதம்தான் புறக்கணிக்க செய்கிறது. அ.தி.மு.க.வை பார்த்து தி.மு.க. பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி.க்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018