ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஆண்டு முழுவதும் விவாதிக்க தயார்- ஸ்டாலினுக்கு, ஜெயக்குமார் பதில்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது யார்? என்பதை சட்டசபையில் நாள் முழுவதும் விவாதிப்பதற்கு நாங்கள் (தி.மு.க.) தயார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயக்குமார் நேற்று காலையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை அனுமதி கொடுத்த விவகாரம் குறித்து ஒரு நாள் முழுவதும் அல்ல. ஒரு ஆண்டு முழுவதும் கூட விவாதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மடியில் கனம் இருந்தால்தான், வழியில் பயம். அவருக்கு (மு.க.ஸ்டாலின்) மடியில் கனம் இருக்கு, அதனால் எப்போதுமே பயம்... பயம்... பயம்... என்ற அடிப்படையிலேயே இருக்கிறார்.

அவரால் ஸ்டெர்லைட் விவகாரத்தை எதிர்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு ஒட்டுமொத்த தமிழகத்தினுடைய துரோகத்துக்கு மறு உருவம் என்று சொன்னால், தி.மு.க.வும், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என்று சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார். 

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018