மெஜிக் கலையில் உச்சத்தை எட்ட நினைக்கும் பப்லா

அவரது பெயர் பப்லா போர்யா பங்களாதேஷில் பிறந்த மென்பொருள் பொறியியலாளர். அவரின் பெற்றோர் பங்களாதேஷில் வசிக்கின்றார்கள். அவரது குடும்பம் ஐந்து அங்கத்தவர்களைக் கொண்டது. தந்தையும் பொறியியலாளராகவே அந்த நாட்டில் பணிபுரிகின்றார். தாயார் பொலிஸ் விசேட சேவைப்பிரிவில் பணிபுரிகின்றார்.

2003 ஆம் ஆணடு இந்நாட்டிற்கு கல்வி கற்க வந்தார். பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்றார். அங்கு அவர் பெற்ற அனுபவங்களும் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல கிடைத்த சந்தர்ப்பமும் பப்லாவுக்கு மெஜிக் கலையைக் கற்கும் திறமையை ஏற்படுத்தின.

மீண்டும் 2008 ஆம் ஆண்டு இலங்கையில் தனது பொறியியலாளர் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு இந்நாட்டில் மெஜிக் கலையை கீழ் மட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்க முயற்சி செய்கின்றார். அதன் ஆரம்பமாக மஹரகம பிரதேசத்தை தெரிவுசெய்துள்ளார். ‘மாஸ்டர் மெஜிக் பப்லா’ என பிரபலமடைந்துள்ள பப்லா மஹரகமயில் மெஜிக் வர்ல்ட் நிறுவனம் என்னும் பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்தார்.

இந்நாட்டில் இலத்திரனியல் ஊடகங்கள் மாத்திரமல்ல அச்சு ஊடகங்களும் அவரின் நண்பர்களாயின. அதன் பலனாக அவரின் மெஜிக் கண்கட்சியை ஐ. ரி. என். தொலைக்காட்சியில் ஹெடகார ஹெந்தாவயிலும் தேசிய தொலைக்காட்சியில் ஆதானீய யௌவனவிலும் ரி. என். எல். தொலைக்காட்சியில் பியபெத்திலும் ஹிரு தொலைக்காட்சியில் ஹதராபாத்திலும் நிகழ்த்தி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

அவர் இங்கு மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் மெஜிக் கலையில் ஆய்வுகளை நடத்தி அதனைக் கற்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

தற்போது அவரின் ‘யூ டியூப்’, ‘மாஸ்டர் மாஜிக் பப்லா’ அதிகளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. மஹரகமவில் அமைந்துள்ள இளம் மெஜிக் கலைஞரான இவரின் நிறுவனத்தில் இந்நாட்டின் பல துறைகளையும் சேர்ந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வீர, வீராங்கனைகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட 880 க்கும் அதிகமானோர் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இளம் மெஜிக் கலைஞர் பப்லாவை அண்மையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் நிச்சயமாக எதிர்கால இலட்சியம் கொண்ட திறமையான மெஜிக் கலைஞராக மிளிர வாய்ப்புண்டு. ஆசியாவில் மெஜிக் கலைக்கு குறைந்தளவு ஆதரவே உள்ளது. ஆகவே இந்நிலைமையை முற்றாக மாற்றியமைப்பதே தனது நோக்கமென பப்லா கூறுகின்றார்கள். மெஜிக் கலையானது ஒரு விஞ்ஞானம் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இக் கலை பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

கற்றலின் ஆர்வம், ஆழ்மனதின் கவர்ச்சி, தந்திரோபாயங்கள் என்பன மெஜிக் கலையை கற்பதற்கு பெரிதும் உதவுவனவாகும். மெஜிக் கலை என்பது வித்தியாசமான செயற்பாடாகும். அதனைக் கற்பதற்கு மனம் ஒருமைப்பட வேண்டும்.

அமெரிக்க நாட்டவரான டெமின் கமெபில்ட் போன்ற மெஜிக் கலைஞர்கள் மெஜிக் கலையை முயற்சி செய்து பார்ப்பதன் மூலமே சாத்தியப்படும் என்பதை உலகிற்கு தெளிவுபடுத்தியவராவர்.

ஆசியாவைச் சேர்ந்த எமக்கு மெஜிக் கலை மிகவும் சவாலாக அமைந்தாலும் அதை நாம் மிகவும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். மெஜிக் கலையைப் பற்றி சமூகத்தில் பலரும் பலவிதமான கருத்துக்களை கொண்டிருந்தாலும் மெஜிக்கலை என்பது கண்கட்டு வித்தையல்ல. விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான விசேட செயற்பாடாகும்.

எல்லா துறைகளுக்கும் உண்மையான ஆலோசனை தேவை. நேர்மறையான கருத்துக்கள், செயற்பாடுகளை உருவாக்கிக்கொள்ள தியானத்துடனான தயார்படுத்தல் அவசியமாகும். மெஜிக் கலைஞருக்கு சிறந்த அறிவும், எதிர்கால நோக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். மெஜிக் கலை கற்பவர்கள் உண்மையான ஆன்மீக உணர்வினை வளர்த்துக்கொள்வது மெஜிக் கலையை கற்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

தனது செயல் தொடர்பாக நலல நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எல்லா நடவடிக்கைகளுக்கும் சிறப்பானதாக அமையும்.

அதற்காக சிறந்த பயிற்சி அவசியம். தனது முதலாவது இலட்சியம் ஐரோப்பியா போன்ற நாடுகளுக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒருவராக மெஜிக் கலை மூலம் சவாலொன்றை ஏற்படுத்துவதாகும். அதற்காக எப்போதும் ஆய்வுகளில் ஈடுபட்டு அவற்றை கண்டுபிடித்து கற்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளார்.

உண்மையில் மெஜிக் பப்லா என்பவர் ஒரு இளைஞர் அவர் வெளிநாட்டவராக இருந்தாலும் இலங்கையை மிகவும் நேசிப்பவர். இறைபக்தி மிக்கவர். மெஜிக் கலையில் உச்சத்தை நோக்கி பயணம் செய்ய தயாராகி வரும் பப்லா முழு ஆசிய நாட்டினருக்கும் பெருமை சேர்ப்பவராவார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019