மக்களுக்காக.. மண்ணின் உரிமைகளுக்காக குரலெழுப்பினால் பாயுமா தேச பாதுகாப்பு சட்டம்.?

ஆதிக்கத்தின், அரசுகளின் பார்வையில் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரலெழுப்புபவர்கள் (தனி நபரோ - குழுவோ) நிச்சயம் கிளர்ச்சியாளர்களாகத்தான் தெரிவார்கள். அவர்கள் மீது சகல விதமான அடக்குமுறைகளையும் அரசுகள் கட்டவிழ்த்துவிட முயலும்.

காரணம், இத்தகையோரை ஊக்குவித்திட கூடாது என்பதுவே. அந்த ரீதியில் தான் தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்து தேச பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைந்துள்ளது தமிழக அரசு.

காரணம், அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட கோரி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் பல அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர். மேலும், தமிழர் வாழ்வாதார உரிமைகளுக்காக மூர்க்கமாக குரலெழுப்புபவர்.

அத்தகைய வேல்முருகன் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் காண சென்ற போது கைது செய்து அலைக்கழித்து தற்போது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துள்ளது அரசு.

நெஞ்சில் கொண்ட மாபெரும் உறுதியை அரசுகளின் அடக்குமுறை சட்டங்களால் சிதைத்துவிட முடியாது என்பதற்கு உதாரணமாக மண்டேலா துவங்கி இன்னும் எத்தனையோ மாவீரர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அரசின் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ள வேல்முருகனும் மீண்டு வருவார் இன்னமும் மூர்க்கத்துடன் என நம்புவோம்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019