சட்டசபையில் பங்கேற்பது பற்றி இன்று முடிவு செய்யப்படும்: மு.க.ஸ்டாலின்!

சட்டசபையில் பங்கேற்பது பற்றி இன்று முடிவு செய்யப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா ‘கலைஞர் 95’ என்ற தலைப்பில் திருவாரூரில் உள்ள அண்ணா திடலில் நேற்று நடந்தது. அப்போது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியன பின்வருமாறு: 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவு வந்து இருந்தாலும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து விடவில்லை என்றால் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை நான் அழுத்தம், திருத்தமாக கூறிக்கொள்கிறேன். 

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய நாசகார ஆட்சியை, கொலைகார ஆட்சியை, ஊழல் மலிந்து இருக்கிற ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான போருக்கு நாங்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறோம். அந்த போரில் வெற்றி பெற உங்கள் சக்தியில் பாதியை எங்களுக்கு தாருங்கள். இந்த பாசிச அரசுகளை வீழ்த்தி, வெற்றியை இந்த மண்ணில் கொண்டாடுவோம். அதிலும் நீங்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளர்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

வாயளவில் பேச்சுக்கொண்டு ஒரு பயனுமில்லை. செயல் அளவில் கட்டும்கல்.

சட்டசபை கூட்டத்தை பற்றி இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். சட்டசபை கூட்டத்தொடரில் நாங்கள் பங்கேற்க வேண்டும் என்று கூறினார்கள். இன்று(ஜூன்-2) நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து பேசி அதற்கு அடுத்தபடியாக நீங்கள் திருப்பதிப்படும் வகையில் முடிவை நாங்கள் நிச்சயம் எடுப்போம். சட்டசபைக்கு நாங்கள் போகத்தயார். எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. 

நான் கருணாநிதியின் மகன். அந்த உணர்வோடு நீங்கள் எடுத்து வைத்துள்ள கருத்துக்களை எல்லாம், இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து பேசி அதற்கு அடுத்தபடியாக நீங்கள் திருப்பதிப்படும் வகையில் முடிவை நாங்கள் நிச்சயம் எடுப்போம். இவ்வாறு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

Ninaivil

திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018