உயிரிழந்த ரஷ்ய விமானி 30 ஆண்டுகளுக்குப் பின் நாடு திருப்பினார்! அதிர்ச்சியில் குடும்பம்

ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.

சோவியத் ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது.

அவர்கள் போரில் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டதுஇதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு விமானி ஒருவர் ரஷியா திரும்பினார். அவரது பெயர் செர்ஜி பேன்டலிக். தெற்கு ரஷியாவின் ரோஸ்டல் மாகாணத்தை சேர்ந்த இவர் வடக்கு காபூலில் பக்ராம் விமான படை தளத்தில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து புறப்பட்ட போது அவரது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால், அவர் மரணம் அடையவில்லை. தற்போது உயிருடன் திரும்பிவிட்டார். மாயமான போது அவரது வயது 30. தற்போது இவருக்கு 60 வயதாகிறது.

இவருக்கு 31 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் காணாமல் போன சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தாள். இவரது தாயாரும், தங்கையும் இன்னும் உயிருடன் உள்ளனர். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

தனது இறுதி காலத்தை ஆப்கானிஸ்தானில் தங்கி கழிக்க போவதாக விமானி பான்டலுக் தெரிவித்தார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். உபசரிப்பதில் சிறந்தவர்கள் என்றார்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018