பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள் - காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கூட்டணி?

இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்து வருகிறது. அதே சமயம் பா.ஜ.க 2014-க்கு பிறகு நாட்டின் பல மாநிலங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.

பா.ஜ.க.வின் பலத்தில் மோத முடியாமல் பல கட்சிகள் தோல்வியை தழுவின. மேலும், பல மாநிலங்களில் கூட்டணி மூலமே ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. பண பலத்தாலும், பதவி பலத்தாலுமே ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுகிறது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க அம்மாநில பா.ஜ.க. பல வழிகளில் முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவை அரியானா மாநில பா.ஜ.க. அரசு குறைத்து அறிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. அசுத்தமான அரசியல் செய்வதாகவும், மக்களை வஞ்சிக்க வேண்டாம் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில், மன்மோகன் சிங் போன்ற படித்த பிரதமர்களை மக்கள் இழந்து வருவதாக டெல்லி முதல்மந்திரி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019