காலா படத்தை எதிர்ப்பது பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் - ரஜினிகாந்த்

கர்நாடகாவில் காலா படம் திரையிடுவதில் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கர்நாடகாவில் காலா படம் திரையரங்குகளில் திரையிடுவதை எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட லன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜிடம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுத்துள்ளது.

நேற்று முதல்-மந்திரி குமாரசாமியை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த வி‌ஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார்.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காலா படத்தை திரையிடுவது தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சமாதானப்படுத்தினார்.இதுபற்றி ரஜினிகாந்த்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘காலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன், திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்’’ என்றார்.

ரஜினி அண்ணன் சத்திய நாராயணா கூறுகையில், ‘‘காலா படத்தை கர்நாடக மக்கள் எதிர்க்கவில்லை. சில தனிப்பட்ட அமைப்புகள் தான் பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கின்றன. கர்நாடகத்தில் ரிலீஸ் ஆகாவிட்டாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் படம் வெளியாகும்’’ என்றார்.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோவிந்த் கூறுகையில், ‘‘இந்தப் பிரச்சினையை நான் மக்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன், மக்கள் முடிவை ஆதரிப்பேன்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில் கடந்த 2016-ம் ஆண்டு ‘நாகர் காவு-2’ கன்னட படத்தை சென்னையில் 8 தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்தோம். ஆனால் சென்னை போலீஸ் கமி‌ஷனர் திடீர் என்று படத்தை வெளியிடக்கூடாது என்று தடுத்துவிட்டார். அப்போது ரஜினிகாந்த் எங்கே போனார்.

கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018