மாணவர்களின் தாழ்வு மானப்பான்மையை மாற்றியமைத்த புதிய சீருடைகள்: செங்கோட்டையன்!

புதிய சீருடைகள் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தாழ்வு மானப்பான்மை இல்லாமல் பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில், 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கலையரங்கை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் திட்டம் மூலம் பாடங்கள் கற்று கொடுக்கப்படும். இந்த கோடு மூலமாக செல்போனில் பாடத்தை தெரிந்து கொள்ளலாம். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி கற்றுத்தர இந்த அரசு முனைப்புடன் செயல்பட உள்ளது. புதிய சீருடைகள் மாற்றி அமைத்ததன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தாழ்வு மானப்பான்மை இல்லாமல் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. 

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கல்வியாளர்கள் உழைத்து இந்த புதிய புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். இந்த புத்தகம் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக இருப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்கள்.1,6,9,11-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வரும் ஆண்டுகளில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்ற எங்களது முடிவில் மாற்றம் இல்லை. மத்திய அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். நீட் தேர்வுக்காக 3486 மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரம் பேர் மருத்துவர்களாகும் வாய்ப்பு உள்ளது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘‘கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. கட்டாய கல்வி சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் விளக்கப்படும் என்று கூறினார். 

Ninaivil

திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018