80 பிளாஸ்டிக் பைகளால் பரிதாபமாக உயிரிழந்த திமிங்கிலம் – இன்னும் உயிர்ப்பலி இருக்கின்றதே

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டால் சுற்றுப்புறச்சூழல் மாசு, கடல்வளம், நிலத்தடி நீர்மட்டம், மண்வளம், விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை கடலில் வீசப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதால்  அதிகளவில் இறந்து வருகின்றன.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சோங்லா மாகாண கடற்கரையில், திமிங்கிலம் ஒன்று திடீரென கரை ஒதுங்கியது. அந்த திமிங்கிலத்துக்கு அப்பகுதியில் இருந்தவர்கள் உணவு கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த திமிங்கிலம் உணவு உண்ணாமல் இருந்துள்ளது.இதைத் தொடர்ந்து, அந்த திமிங்கிலத்தை சோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் ஏதோ சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதனால் தான் திமிங்கிலத்தால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதால், அதை அகற்றும் முயற்சியில் இறங்கினர். 5 நாள் சிகிச்சைக்கு பின் திமிங்கிலத்துக்கு வாந்தி ஏற்பட்டு 8 கிலோ எடையிலான 80 பிளாஸ்டிக் பைகள் வெளியேறின. 

சிறிது நேரத்தில் திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் கழிவால் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துவரும் நிலையில், பிளாஸ்டிக் பைகளால் திமிங்கிலம் உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018