அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூருக்கு வெள்ள அபாயம்.. கர்நாடக வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என கர்நாடக மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தென் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாகவும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் பெங்களூரு பகுதியில் கொட்டிய கனமழையால் சுவர் இடிந்ததில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ள பெருக்கு ஆபத்து உள்ளதாக அம்மாநில வானிலை மையம் மற்றும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.பெங்களூருவின் தாழ்வானப் பகுதிகளான ராஜராஜேஸ்வரி நகர், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மகாதேவபுரா மற்றும் பொம்மனஹல்லி ஆகிய ஐந்து பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஜூன் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை பெய்யும் என்றும் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தின் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மழை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். சனிக்கிழமை கொட்டிய பலத்த மழையல் இம்ரான் நடாப் என்பவர் புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள வடிகாலில் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018