“முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளை வீடு திரும்பி இருக்கிறார்” அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சட்டசபை நிகழ்வுகளில் தி.மு.க.வினர் பங்கேற்றதை தொடர்ந்து, ‘முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார்’, என்று மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.

கேள்வி:- சட்டசபை நிகழ்வுகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று இருக்கிறார்களே?

பதில்:- கிராமத்தில் கூறுவது போல, இது மாப்பிள்ளை முறுக்கை தான் காட்டுகிறது. அவர்களாகவே சென்றார்கள், தற்போது அவர்களாகவே வந்துள்ளனர். ஆக முறுக்கிக்கொண்டு போன மாப்பிள்ளை (மு.க.ஸ்டாலின்) மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார். கடந்த வாரத்தில் 4 நாட்கள் சட்டசபை நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்கவில்லை. அதில் எவ்வளவோ விஷயங்களுக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் தி.மு.க.வினர் அதை வீணடித்து விட்டனர். இருந்தாலும் திரும்பி வந்திருப்பதை வரவேற்கிறோம். இனியாவது அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

கேள்வி:- கர்நாடக முதல்-அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

பதில்:- அதில் எந்த பயனும் இருக்காது.

கேள்வி:- அ.தி.மு.க.வையும், கட்சி அலுவலகத்தையும் விரைவில் மீட்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே?

பதில்:- (சிரித்தபடியே) ஆளே இல்லை... ஆனாலும் அவர் ‘டீ’ ஆற்றிக்கொண்டு இருக்கிறார். இதை விட என்ன சொல்லமுடியும்? மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ‘எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும், அவர் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?’, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து அமைச்சர் ஜெயக்குமார் கிளம்பி சென்றார்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018