வடக்கு, கிழக்கு பிரிமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் வடக்கு,கிழக்குபிரிமியர் லீக் -2018 உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வும் முதலாவது உதைபந்தாட்டப் போட்டியும் கடந்த (30) புதன்கிழமை இரவு 7.00 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

வடக்கு,கிழக்கு மாகணத்திலிருந்து பன்னிரெண்டு பலம் வாய்ந்த அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின. பங்குபற்றும் ஒவ்வொருஅணியிலிருந்தும் ஒன்பது வீரர்கள் குறிக்கப்பட்ட கோஸ்டியின் மாகாணத்திலிருந்தும் ஏனைய வீரர்கள் வெளிமாகாணங்களிலிருந்தும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக வெளிநாட்டு வீரர்களும் இவ்வணிகளில் விளையாடுவது சிறப்பம்சமாகும்.

இலங்கை வரலாற்றில் மிகப் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்ற இவ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டும் கழகத்திற்கு ரூபா ஐம்பது இலட்சம் பணப் பரிசும் பெறுமதியான கிண்ணமும் வழங்கப்படுவதுடன் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு ரூபா முப்பத்தைந்து இலட்சம் பணப்பரிசும் பெறுமதியான கிண்ணமும் மூன்றாம் இடத்தைப் பெறும் அணிக்கு ரூபாபத்து இலட்சம் பணப்பரிசும் நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கு ரூபா ஐந்து இலட்சம் பணப்பரிசும் வழங்கப்படவிருக்கின்றன.

இடத்தைப் பெறும் அணிக்குரூபாபத்து இலட்சம் பணப் பரிசும் கடந்த 30ம் திகதி நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிளியூர் உதைபந்தாட்டக் கழகம் திருமலைமாவட்டத்தின் டைட்டென்ஸ் அணியினரை (08-−02) வெற்றிகொண்டனர். 31ம் திகதி நடைபெற்ற 2வது போட்டியில் மன்னார் மாவட்டத்தின் மாந்தோட்டம் உதைபந்தாட்ட அணியினர் யாழ்பாண மாவட்டத்தின் றில்கோகொன்கியூரஸ் அணியினரை (2-−0) கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டனர். போட்டிகள் யாவும் மின்னொளியிலேயே நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018