ஆப்கானில் பாதி சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட பாதி சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று மனித உரிமைக் குழுக்கள் கூறியுள்ளன.

பயங்கரவாதம், குழந்தைத் திருமணம், வறுமை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலினப் பாகுபாடு ஆகியவையே சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போவதற்கான முக்கியக் காரணங்கள்.

அதிகரித்து வரும் வன்முறையால், பாடசாலைகள் பல கட்டாயமாக மூடப்பட்டுள்ளன.

அதனால், 7இல் இருந்து 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 3.7 மில்லியன் பேர், அதாவது 44 வீதத்தினர் பாடசாலை செல்லமுடியவில்லை.

அதிலும், பெண்களுக்குக் கல்வியறிவு அளிக்கக் கூடாது எனும் தலிபான் இயக்கத்தின் மனப்போக்கால், சிறுமிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாய் இருப்பதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

பயங்கரவாதம், வறுமை, வேலையின்மை ஆகியவற்றை எதிர்த்துப் போரிடக் கல்வியே மிகச் சிறந்த ஆயுதம் என்பதை அவை சுட்டின.

இருப்பினும், அது ஆப்கானியச் சிறுவர்களுக்குக் கிடைக்காமல் போவது வருத்தத்திற்குரியது என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்துள்ளன. 

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018