2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உழைத்து வருகிறோம் பிரதமர் மோடி

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உழைத்து வருகிறோம் என பிரதமர் மோடி கூறினார்.பிரதமர் நரேந்திர மோடி  ஆவாஸ் யோஜனாவின் பயனாளிகளுடன் உரையாடும் போது கூறியதாவது:-

என்.டி.ஏ அரசு வீட்டு வசதிக்காக பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு மனிதனும்  சொந்தமாக வீடு கட்ட  விரும்புகிறான். அவர் அல்லது அவள் ஒரு சொந்த வீட்டில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆவாஸ் யோஜனா செங்கல்  மற்றும் சாந்து  பற்றியது மட்டுமல்ல.இது வாழ்க்கையின் சிறந்த தரம் மற்றும் கனவுகள் நிறைவேறுவதைப் பற்றியது ".

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உழைத்து வருகிறோம். 

இந்த யோஜனா திட்டத்தின் மூலம், மத்திய பா.ஜ.க ஆட்சியில் குறைந்த விலையில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வீட்டு வசதி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

, மக்கள் அனைவருக்கும் தரமான மின்சாரம், குடிநீர் வசதியுடன் வீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, குறைந்த விலையில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  

பல அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் நேரடியாக தொடர்புகொள்வது அற்புதமானது. நாம் மேம்படுத்தக்கூடிய சில பகுதிகளை உள்ளடக்கிய திட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஒருவர் அறிந்துகொள்கிறார்:

காங்கிரஸ்  அரசாங்கத்தின்போது, பயனாளிகள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்  பட்டியல் மூலம் தேர்வு  செய்யப்பட்டனர்.நாம் சமூக-பொருளாதார சாதி-சென்செக்ஸ் மூலம் தேர்வு செய்யத் தொடங்கினோம். முன்னர் அவர்கள் விட்டுச் சென்ற அந்த பயனாளிகளை நாம் சேர்த்துக் கொண்டோம் என கூறினார்.

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018