துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது ரஜினிகாந்த் வேதனை

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

காலா படத்தின் புரமோ‌ஷனுக்காகவே ரஜினி தூத்துக்குடி சென்றதாக விமர்சிக்கப்படுகிறதே? என நிருபர்கள் கேள்விக்கு 

சாரிங்க... அது பற்றி நான் சொல்ல விரும்பல. ஆண்டவன் அருளால் என்னோட ரசிகர்கள், மக்களோட ஆதரவு உள்ளது. படம் ஒடுவதற்காக இந்த மாதிரி ஸ்டண்ட் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. சினிமாவுக்கு வந்து 43 வரு‌ஷம் ஆகுது. இந்த வயசுல நான் அதுமாதிரி செய்யணும்னு அவசியம் இல்லை. அரசியல் வேற, சினிமா தொழில் வேற. என அவர் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. 

காலா படத்திற்கு எதிர்ப்புகள் இன்னும் கம்மியா இருக்கேன்னு நான் பார்த்துட்டு இருக்கேன். இதைவிட ஜாஸ்தியா இருக்கும்னு நினைச்சேன். படம் நல்லா இருந்தா 100 சதவீதம் நன்றாக ஓடும். நன்றாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

காலா படத்திற்கு கர்நாடகாவில் ஒரு பிரச்சினையும் வராது என்று எதிர்பார்க்கிறேன். எதிர்ப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இது கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் தெரியும். அங்கு நமது தமிழக மக்கள் மட்டுமல்ல. பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே அவர்களை ஏமாற்றக் கூடாது.

எனவே கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கு. நான் மதிக்கும் பெரியவர் தேவேகவுடாவும் இருக்கிறார். அவர் நிச்சயம் படத்தை தடை செய்ய விடமாட்டார்.

மேலும், நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்திற்குரியது. அந்த சம்பவம் வேதனையை தருகிறது. இதைத் தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் என்று கூறினார்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018