மன்னார்குடியின் உண்மை ஜாதகம்... "அரை வேக்காடு" தினகரனுக்கு ஜெ.தீபா கடிதம்

மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா, தினகரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறுகையில், குக்கரில் வேக வைத்து விசில் அடிக்கும் அரை வேக்காடு டிடிவி தினகரன் அவர்களே, 98 சதவீத அதிமுகவின் தொண்டர்கள் அவரிடம் இருப்பதாக சொல்லி பிரம்மாண்ட மறைமுகமாக கொள்ளைப்புற கூட்டணி ஓபிஎஸ்- ஈபிஎஸ்- திமுக என கூட்டணியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

2004-ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்தான் இந்த தினகரன்- இவரிடம் இருக்கும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளும் பிடுங்கப்பட்டது. அதனால் 98 சதவீதம் இல்லை, 100 சதவீதம் கூலிப்படையினர் மட்டுமே இவர் பின்னால் வருவார்கள்.

வரலாற்றை திரும்பி பார்த்தால்.... 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தின் கூட்டு கொள்ளை சதியை முறியடித்து, பத்திரிகையாளர் சோ.ராமசாமி மற்றும் அப்போதைய டிஜிபி ராமானுஜம் மற்றும் பெங்களூர் ஸ்பெஷல் போலீஸ் இன்டலிஜன்ட் தெரிவித்த எச்சரிக்கையின் அடிப்படையில் காவல் துறை உதவியோடு சசிகலா மற்றும் அவரின் கூட்டாளிகளை 100-க்கும் மேற்பட்ட காவலர்களின் உதவியோடு போயஸ் தோட்டத்தை விட்டு போலீஸ் வேனில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இப்படி இருக்க அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த சசிகலா குடும்பம் திக்குமுக்காடி, திமுகவின் உதவியை நாடியது. அதன்பிறகு சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான். ஜெயலலிதா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பூங்குன்றன் என்னை தொடர்பு கொண்டார்.

நான் அவரை பெங்களூர் சிறையில் சந்தித்தேன். அத்தை என்னிடம் பேச கூடாது என்று சசிகலா சொன்னதால் காவலர்கள் என்னை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க தாமதித்தனர்.

அப்போது மாலை 6 மணி வரை காத்திருந்து திரும்ப சென்றேன். ஆறுமுகசாமி கமிஷனை வைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது, அரை வேக்காடு குக்கரை வைத்து கையாளாகாத தினகரனை வைத்து அதிமுகவை ஆளவும் முடியாது என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018