போராட்டங்கள் ஏதோ ஒரு வடிவில் தொடரும்- சுரேஸ்பிரேமசந்திரன்

தமிழர்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தலைவர்காளல் முன்னெடுக்கப்பட்ட  அறவழிப்போராட்டம்சிங்கள அரசாங்கத்திற்கு புரிந்து கொள்ள முடியாத மொழியாக இருந்தமையினாலேயே அச் சிங்கள அரசாங்கத்திற்கு விளங்கக்கூடிய மொழியில் தமிழர்களது போராட்ட முறைமை மாற்றம் அடைந்தது என முன்னாள் பாராளுன்ற உறுப்பினரான சுரேஸ்பிரேமதச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன் . சிவகுமாரின் 44ஆண்டு  நினைவு நாள் அஞ்சலி நிகழ்வானது    உரும்பிராயில் உள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக இடம்பெற்றது.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது.

அறவழிப் போராட்டம் என்பது சிங்கள அரசாங்கம் புரிந்துகொள்ளாத மொழி எனவும் எனவே அவர்களுக்கு புரிந்துகொள்ளும் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்ற சூழ் நிலை வந்தபோது  தமிழராய்ச்சி மாநாட்டில் 9 பேர் கொல்லப்பட்டமை தமிழ் மக்கள் மீது கொண்டுவரப்பட்ட அடக்கு முறைகள் போன்ற .அனைத்தும் இணைந்தே தமிழர்களுடைய போராட்ட வடிவத்தை மாற்றி அமைத்தது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட போராட்டத்தின் முன்னோடியாக சிவகுமார் காணப்பட்டார். 

தங்களுடைய காலத்தில் தமிழர்களுடை பிரச்சினைக்கு தீர்வு காணப்படா விட்டால் இப் போராட்டத்தை இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று தந்தை செல்வா கூறியது போன்று போராட்டமானது இளைஞர்களுடை கைகளுக்கு மாறியது.

இவ்வாறு மாறிய போராட்டமானது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக தமிழ் மக்கள் இம் மண்ணில் தமது சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் தமது கலை கலாச்சாரங்களுடனனும் வாழ வேண்டும் என்பதற்காக பல இலட்சக்கணக்கான மக்களதும் மாவீரர்களதும் உயிர்த் தியாகமானது இம் மண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அவ்வாறு தொடங்கப்பட்ட போராட்டமானது இன்னமும் முற்றுப் பெறாதா நடந்துகொண்டிருக்கின்ற  போராட்டமாகவே உள்ளது.

இத்தகைய இழப்புகளின் பின்னரும் பொருளாதார நெருக்கடிகளின் பின்னரும் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கும் சிங்கள அரசாங்கம் எந்தளவு தூரம் அக்கறை செலுத்துகின்றது என்பது தெரியாது. 

சர்வதேச நெருக்கடிகள்  சர்வதேச உறவுகள் என பல விடயங்கள் கூறப்பட்டாலும் ஆளும் தரப்பிடம் இணைந்து இருந்தால் தான் எதையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறுகின்ற ஒரு தரப்பும்  இல்லை இவையெல்லாம் கண்டிக்கப்பட வேண்டும் தமிழ் மக்கள் காட்டிக்கொடுக்கப்படுகின்றார்கள் அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்ற ஒரு தரப்பும் உள்ளது. 

நீண்ட இழப்புகளையும் பாரி விலைகளையும் நாம் கொடுத்திருக்கின்றோம். இவற்றுக்குப் பதிலாக குறைந்த பட்சம் வட கிழக்கு இணைந்த பிரதேசத்தில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். அது உருவாகும் வரையில் ஏதோ ஒரு வடிவில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இந்த போராட்டங்கள் நிச்சயம் ஏதோ ஒரு வடிவில் தொடரும். 

நல்லாட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி   தமிழர்களை அடக்கி ஆண்டால் தான் மீண்டும் ஒரு தனிநாட்டுக் கோசம் எழும்பாது என்று நினைக்கின்ற இராணுவமாக இருந்தாலும் சரி   ராஜபக்ஷாக்களுமாக இருந்தாலும் சரி   அவர்கள்  ஒரு விடயத்தை  புரிந்துகொள்ள வேண்டும். அதாவது தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எட்டப்படும்வரை இந்த நாடு பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல சகல வழிகளிலும் பின்தங்கிய நாடாகவே இருக்கும்.

எனவே சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய புத்தி ஜீவிகள் தம்மை முற்போக்கு வாதிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் அனைவரும் இணைந்து இதற்கான முன்னோக்கிய நகர்வை மேற்கொள்ள வேண்டியதுடன் அதற்காக நாங்களும் ஒன்றுபட வேண்டும் என்றார். 

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018