பேப்பர் மூலம் காப்பாற்றப்பட்ட பெண்ணின் உயிர்!

குடியிருப்பு ஒன்றில் இருந்த பெண் ஒருவர், அவசரமாக காவல்துறையினரை அழைக்குமாறு பேப்பர் ஒன்றில் எழுதி ஜன்னலால் வெளியே எறிந்துள்ளார். இதனை பார்த்த வீதியில் சென்ற பாதசாரி ஒருவரால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

Franconville நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 34 வயதான பெண் ஒருவர், ‘SOS Appelez la police, 8e porte gauche!’ (அவசரமாக காவல்துறையினரை அழைக்கவும். 8ம் இலக்க கதவு!’) என பேப்பர் ஒன்றில் எழுதி ஜன்னலால் வெளியே வீசியுள்ளார்.

அதனை கண்டெடுத்த வீதியில் சென்ற நபர் ஒருவர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கண்காணிப்பு காவல்துறையினர் குறித்த பெண்ணின் வீட்டினை கண்டுபிடித்துள்ளனர்.

அப்பெண்ணின் வீட்டுக்கு முன்பாக 49 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அந்த நபர், குறித்த பெண்ணின் கணவர் எனவும், தினமும் குடித்துவிட்டு வந்து அப்பெண்ணை தாக்கியுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், பெண்ணின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019