விடுதலை செய்யப்படுவாரா பேரறிவாளன்.. அமைச்சர் சி.வி சண்முகம் பதில்.!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்யப்படுவார்களா என்ற கேள்விக்கு நேற்றைய தினம் சட்டப்பேரவையில் பதிலளித்துள்ளார் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்.

மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று பேசும்போது, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யும் கைதிகளுடன் சேர்த்து சிறையில் நோயால் கஷ்டப்படும் 2 இஸ்லாமிய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்" என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி சண்முகம், "பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், அவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் கையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தால் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் மாநில அரசு விடுதலை செய்துவிடும்" என பதிலளித்துள்ளார்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018