பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ‌ஷரபோவாவை வீழ்த்தினார், முகுருஜா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா நேர் செட்டில் ரஷியாவின் ‌ஷரபோவாவை தோற்கடித்தார்.

‌ஷரபோவா தோல்வி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான மரிய ‌ஷரபோவாவும் (ரஷியா), தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள கார்பின் முகுருஜாவும் (ஸ்பெயின்) மோதினர்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய முகுருஜா, அதிவேகமான ஷாட்டுகளை அடித்து ‌ஷரபோவாவை திணறடித்தார். 70 நிமிடங்களில் ‌ஷரபோவாவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த முகுருஜா 6–2, 6–1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

ஹாலெப் போராடி வெற்றி

மற்றொரு கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ மங்கை ஏஞ்சலிக் கெர்பரும் (ஜெர்மனி) பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டில் நிறைய தவறுகள் இழைத்ததால் பின்னடைவை சந்தித்த ஹாலெப், அடுத்த செட்டுகளில் சுதாரித்து விளையாடி சரிவில் இருந்து மீண்டார்.

2 மணி 14 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஹாலெப் 6–7 (2–7), 6–3, 6–2 என்ற செட் கணக்கில் கெர்பரை வீழ்த்தி 3–வது முறையாக அரைஇறுதியை எட்டினார். இன்று நடக்கும் அரைஇறுதியில் ஹாலெப், முகுருஜாவுடன் மோதுகிறார். இதில் வெற்றி பெற்றால் ஹாலெப் முதலிடத்தை தக்க வைப்பார். தோல்வி அடைந்தால் முகுருஜா வசம் ‘நம்பர் ஒன்’ அரியணை சென்று விடும். மற்றொரு அரைஇறுதியில் அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ்– ஸ்லோனே ஸ்டீபன்ஸ் சந்திக்கிறார்கள்.

ஜோகோவிச் காயம்

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இத்தாலி வீரர் மார்கோ செச்சினட்டோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) கழுத்து வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்து வரும் விம்பிள்டனில் அவர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. விம்பிள்டனில் கலந்து கொள்வது குறித்து இப்போது எதுவும் உறுதியாக சொல்ல முடியாது என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018