என்.ஈ.பீ.எல் காற்பந்தாட்ட தொடர்: நேற்றைய ஆட்டம் சம நிலையில்!

வடகிழக்கு பிரிமியர் லீக் தொடரின் 6 அவது போட்டியில் மட்டுநகர் சுப்பர் கிங்கஸ் அணியும் அம்பாறை அவெஞ்சர்ஸ் அணியும் தலா இரண்டு கோல்களைப் போட்டு போட்டியைச் சமப்படுத்தியுள்ளன.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில், நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில், அம்பாறை அவெஞ்சர்ஸ் அணியும் மட்டு நகர் சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த போட்டியில் அம்பாறை அவெஞ்சர்ஸ் மற்றும் மட்டு நகர் சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன.

ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் அம்பாறை அணியைச் சேர்ந்த ஹரூன் முதலாவது கோலைப் போட்டார். 48வது நிமிடத்தில் ஹரூன் மீண்டும் ஒரு கோலினை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

55வது நிமிடத்தில் மட்டுநகர் அணியைச் சேர்ந்த ஜெயசூரியா ஒரு கோலினைப் போட்டு மட்டுநகர் அணிக்கு ஒரு கோலினை பெற்றுக் கொடுத்தார். 90வது நிமிடத்தில் மட்டுநகர் அணியின் அனஸ் ஒரு கோலினைப் போட்டு ஆட்டத்தினை சமநிலைப்படுத்தினார்.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக அம்பாறை அணியைச் சேர்ந்த ஹரூன் தேர்வு செய்யப்பட்டார்.

இதேவேளை, இந்த தொடரின் 7 ஆவது போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் ரிங்கோ டைட்டன்ஸ் அணியும், முல்லை ஃபீனிக்ஸ் எப்சி அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018