டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 2-ந்தேதி இரவு டெல்லி சென்றார். அங்கு 2 நாட்கள் நடந்த கவர்னர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாடு நிறைவடைந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்துப் பேசினார். பின்னர் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று பிரதமர் மோடியை கவர்னர் சந்தித்தார். பகல் 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், அரசியல் கட்சிகள் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி பிரதமரிடம் கவர்னர் எடுத்துக் கூறினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூடு மற்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் விவரங்களை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018