டெஸ்ட் போட்டியிலும் பொளந்து கட்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணி!!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 414 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. 

இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் உடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆடிய, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்களை எடுத்தது. இதையடுத்து, இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷேன் டாவ்ரிச் நிலைத்து நின்று ஆடி சதமடித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

ஷேன் டாவ்ரிச் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களை குவித்தார்.இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து, தடுமாறி வருகிறது. 

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019