10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்த விரும்பாத முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக தனது சம்பளத்தை உயர்த்தி எடுத்துக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி , கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய சம்பளத்தை ரூ.15 கோடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என முடிவெடுத்தார்.

அதன்படி தனது ஆண்டு சம்பளமாக கடந்த 2008-09-ம் நிதி ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக எடுத்துக்கொள்கிறார். நிறுவனத்தின் இயக்குநர் குழு இவரின் சம்பளத்தை ரூ.38.75 கோடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. ஆனாலும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த விரும்பவில்லை.

அதே சமயத்தில் இயக்குநர் குழு உறுப்பினர்களின் சம்பளம் அதிகரித்து கொண்டே போனது. . முகேஷ் அம்பானியின் உறவினர் நிகில் ஆர் மெஸ்வானி மற்றும் ஹீதல் ஆர் மெஸ்வானியின் ஆகியோர் கடந்த நிதி ஆண்டு சம்பளமாக தலா ரூ.16.58 கோடி வாங்கினர்..

இந்நிலையில் இந்த நிதியாண்டில் அவரது சம்பளத்தை உயர்த்திட நிறுவனத்தின் குழு அறிவித்தது. இதனை ஏற்காத முகேஷ் அம்பானி , ஏற்கனவே எடுத்த முடிவின்படி இந்தாண்டும் அதே ரூ. 15 கோடியை சம்பளமாக பெற்றுக்கொண்டார்.

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019