நீட் எனும் மரணக்கயிற்றை அறுக்க வேண்டும்: வைகோ அறிக்கை

மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் எனும் மரணக்கயிற்றை அறுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவிலேயே பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்வு பெற்ற 91.1 தமிழக  மாணவர்கள் நீட் தேர்வில் இந்தியாவில் 34வது  இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து பிள்ளைகள் நீட் தேர்வு எனும் மத்திய அரசின்  நயவஞ்சகத் திட்டத்தால் மருத்துவப் படிப்புக்கு வாய்ப்புக் கிடைக்காமல், மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அனிதா, பிரதீபா எனும்  இளம் தளிர்கள் தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், திருச்சி பகுதியை சேர்ந்த சுப நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தருகிறது.

மாணவ, மாணவிகளே வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்ற நம்பிக்கையோடு கிடைக்கின்ற கல்வி வாய்ப்பைப்  பயன்படுத்துங்கள். நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொல்லி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு மசோதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு  அனுப்பியது.

மத்திய அரசு அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டது. ஆனால் மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டில் நீட் தேர்விலிருந்து  தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கூறி மோசடி ஏமாற்று வேலையில் ஈடுபட்டனர்.

சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் நீட் என்கின்ற சாபக்கேட்டைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் பயிற்சி மையங்கள் எனும் பண வசூல் மையங்கள்  காளான்கள்போல முளைத்துவிட்டன. நீட் தேர்வு எனும் மரணக் கயிற்றை அறுத்து எறிய சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து பெற்றோரும்,  மாணவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். அதற்கான அறப்போர் மூள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018