ஈழத் தமிழ் குடும்பத்துக்கு ஆதரவாக ஆஸியில் ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகள் உட்பட்ட இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை விடுவிக்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தினர் மத்திய குயின்ஸ்லேன்ட் பிலோலா பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 5ஆம் திகதியன்று அதிகாலையில் குறித்த இலங்கை தமிழ் குடும்பத்தின் வீட்டுக்கு சென்ற அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள், கணவன் மனைவி உட்பட இரண்டு பிள்ளைகளையும் மெல்பேர்னுக்கு அழைத்துச்சென்றனர்.

நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களின் இரண்டு சிறுப்பிள்ளைகளே இந்த நிலைமைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதான அவர்களின் வீசா அனுமதி முடிவடைந்தநிலையில், நாடு கடத்துவதற்காகவே எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை மெல்போனுக்கு அழைத்துச்சென்றனர்

எனினும், இதையடுத்து மேற்கொள்ளபட்ட சட்ட நடவடிக்கைகளுக்கமைய, குறித்த இலங்கை குடும்பத்தினர் இறுதி 11வது மணித்தியாலத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக ஏற்றப்பட்டிருந்த விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.

எனினும், அவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்காக தொடர்ந்தும் மெல்பேர்னில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களை முன்னர் தங்கியிருந்த பிலோலேக்கு மீண்டும் அனுமதிக்குமாறு கோரியே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என்றும், குயின்ஸ்லாந்தில் குடியமர்த்துமாறும் கோரி பிலோலே மக்களால் சுமார் ஒரு லட்சம் கையொப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019