ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - சார்ல்ஸ் நிர்மலநாதன்

வடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் இலக்கினை கொண்டதாகும். ஆகவே யுத்தத்தின் காரணம் காட்டி  கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் இடம்பெறும் நில ஆக்கிரப்பு குறித்தும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சட்டமூல திருத்த விவாதத்தில் உரையாற்றும் போதே  அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்.  

வடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட யுத்தமாகும், இந்த யுத்தம் அரசியல் யுத்தமாகவே கருதப்படுகின்றது, இதில் எமது தரப்பினர் ஆயுதம் ஏந்தி போராடியதும் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தை அடிப்படியாகவைத்தேயாகும்.

இப்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் எமக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியமாகும். அதேபோல் அரசியல் கைதின் பெயரில் இன்றும் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை விடுவிப்பதாக ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதி வழங்கினார். ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒருசில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர், அதனை நாம் மறுக்கவில்லை, எனினும் அவர்கள் சாதாரண காரணிகளின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களை விடுவித்துள்ளனர்.

மேலும் சிலர் பணத்தை வாரி இறைத்து சட்டத்தரணிகளின் உதவியில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும்  சாதாரண மக்கள் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டனர்.

இதுவரை காலமாக  ஜனாதிபதி ஒரே ஒரு கைதியை மட்டுமே விடுதலை செய்துள்ளார். தன்னை கொலைசெய்ய வந்தவரை தான் பொதுமன்னிப்பின் பெயரில் விடுதலை செய்வதாக கூறினார். ஆனால்  ஆனந்த சுதாகரன்  விவகாரத்தில் ஜனாதிபதியின் மௌனம் மோசமானது.

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை சந்தித்து அடுத்த புதுவருடத்தின் போது உங்கள் தந்தை உங்களுடன் இருப்பார் என வாக்குறுதி வழங்கினார்.

ஆனால் புதுவருடம் சில மாதங்களாகியும் அவரை விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் எதிர்வரும்  18ஆம் திகதி  ஜனாதிபதி கிளிநொச்சிக்கு  விஜயம்  செய்கின்றார். ஆகவே ஆனந்த சுதாகரனை விடுதலை செய்துவிட்டு அவரது பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குறதியை நிறைவேற்றிவிட்டு, ஏனைய அரசியல் கைதிகளை விடுவித்து அதன் மூலமாக எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டு கிளிநொச்சிக்கு வருவதே சிறந்ததாகும். ஆகவே இந்த கோரிக்கையை நான் தாழ்மையாக ஜனாதிபதிக்கு முன்வைக்கின்றேன்.

மேலும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரின் எமது இடங்களில் இராணுவம் பாரிய ஆக்கிரமிப்பை செய்து வருகின்றது. சுற்றுலா விடுதி, உணவகங்கள், தேநீர் கடைகள் என இராணுவம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கி  வடக்கில் பாரிய சுற்றுலா தளங்களை அமைத்து வருகின்றது. தேசிய பாதுகாப்புக்கு தேவை என்ற பெயரில் எமது மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் புதிய கடற்படை முகாம் அமைத்து வருகினறனர்.

இதனால் மீனவர்களின் பகுதிகளை அபகரித்து வருகின்றது. இது யுத்தம் முடிவுக்கு வந்தபோது அபகரித்த இடம் அல்ல,  கடந்த ஆண்டு அபகரித்த இடமாகும். ஆகவே தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் எமது மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். 

2009 ஆம் ஆண்டு தேவைப்படாத இடம் எவ்வாறு 2017 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புக்காக தேவைப்படும் என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. இவர்கள் விடுதிகளை அமைப்பது குறித்து நாம் முரண்படவில்லை. ஆனால் எமது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் எமது மீனவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஜனாதிபதியோ உரிய அமைச்சர்களோ முயற்சிக்கவில்லை, வடக்கில் இன்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மட்டுமே உள்ளது, இராணுவம் செய்வதை எவரிடமும் கேட்க முடியாது உள்ளது.

அமைச்சர்கள் எவரும் இராணுவ நடவடிக்கைகளில்  தலையிட தயாராக இல்லை. நாமும் நல்லிணக்கத்தை விரும்பியே செயற்பட்டு வருகின்றோம். தேசிய நல்லிணக்கம் ஒன்றினை உருவாக்காது இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. ஆகவே இந்த விடயங்களில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018