என்னைக் கொன்னுருவாங்களோனுபயமா இருக்கு: கிம் ஜாங் உன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்பில், தன்னை கொலை செய்து விடுவார்களோ என பயமாக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 

உலக நாடுகளின் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில ஆண்டுகளாக ஏவுகணை சோதனை நடத்தி வந்தார். இதையடுத்து, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. 

இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்றது, இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு வித்திட்டது. 

இதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபரும் தென்கொரிய அதிபரும், கொரிய போருக்குப் பின் முதல்முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் மற்றும் அமெரிக்க அதிபர் இருவரும் சிங்கப்பூரில் சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்தச் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்தானது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு, வரும் 12 ஆம் தேதி காலை 9 மணியளவில், சிங்கப்பூரில் உள்ள சென்டோஸா தீவில் இருக்கும் கேப்பல்லா ஹோட்டலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தச் சந்திப்பின்போது தன்னை கொலை செய்வார்களோ என அஞ்சுவதாக கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிம் ஜாங் உன் தனது 3 ராணுவ தளபதிகளை மாற்றியுள்ளார். மேலும், தென் கொரியாவில் சிலர் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவர் மரண பயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019