சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 அபராதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ராமநாதன் தாக்கல் செய்த மனுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன.

அவரை சிறந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டால் மட்டுமே மர்மங்கள் வெளியே வரும்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் மனுதாரருக்கு ரூ.50,000 அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் மனுதாரர் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018