ஆவணங்களை வெளியிடுவதால் எந்தவித பாதிப்புமில்லை -சட்ட மா அதிபர்

பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில்  ஆணைக்குழு விசாரணை நடத்திய பின்னர் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை யில்  உள்ளடங்கியுள்ள வெளியிடப்படாத   ஆவணங்களை  வெளியிடு வதால், தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப் படும்  விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என்று 

சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய அறிவித்துள்ளார்.   

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுக்கு சட்ட மா அதிபர் அனுப்பி வைத்துள்ள ஆலோசனைக் கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்வைத்த அறிக்கையில் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத பகுதிகளை பகிரங்கப்படுத்துமாறு பலர் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவை கோரியுள்ளனர்.

 இந்த நிலையில் அதனை பகிரங்கப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் இந்தவார ஆரம்பத்தில் சட்ட மா அதிபரின்  ஆலோசனையைக் கோரியிருந்தார்.

 அது தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இது குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளதுடன்  அந்த ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதன் ஊடாக விசாரணைகளுக்கு பாதிப்பில்லை என அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின்  அறிக்கையில் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் கடந்த 05ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Ninaivil

திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018