நாட்டைப் பிள­வு­ப­டுத்தும் எந்த உள்­ள­டக்­கமும் 20ஆவது திருத்­தத்தில் இல்லை - ஜே.வி.பி.

நாட்டைப் பிள­வுப்­ப­டுத்தும் எந்த உள்­ள­டக்­கமும் 20ஆவது திருத்­தத்தில் இல்லை. விமர்­சிப்­ப­வர்கள் முடி­யு­மானால் நிரூ­பித்­துக்­காட்­டட்டும். அத்­துடன் பல­த­ரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டியே இதனை தயா­ரித்தோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டைப் பிள­வு­ப்ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது என தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்­பாக வின­வி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து கூறு­கையில்,

நிறை­வேற்று ஜனா­தி­பதி என்ற பெயரில் இருந்து நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கு­வ­தற்கு, புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வர நாங்கள் விருப்­ப­மா­கவே உள்ளோம். என்­றாலும் தற்­போது அவ்­வா­றான எத­னையும் செய்­ய­மு­டி­யாது.

நாங்கள் கொண்­டு­வந்­தி­ருக்கும் திருத்­தத்தில் அவ்­வாறு எதுவும் இல்லை. 78 அர­சி­ய­ல­மைப்பு ஊடாக இந்த நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கவே நாங்கள் 20ஆம் திருத்­தத்­தி­னூ­டாக மேற்­கொண்­டுள்ளோம்.

 20ஆம் திருத்­தத்தை நாங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்த பின்னர் அதனை வாசித்து பார்க்­கா­மலே, அது நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் பிரே­ரணை என சிலர் பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். அவ்­வா­றான ஒரு வாக்­கியம் எனும் எமது பிரே­ர­ணையில் இருக்­கு­மாக இருந்தால் காட்­டட்டும். இல்­லாத விட­யத்தை தெரி­வித்து இந்த திருத்­தத்தை இல்­லா­ம­லாக்க முயற்­சிக்­க­வேண்டாம். 

 இந்த பிரே­ர­ணையை அங்­கி­க­ரித்­துக்­கொள்ள மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­புக்கு செல்­ல­வேண்டும் என யாரும் தெரி­விப்­ப­தாக இருந்தால், அதற்கும் நாங்­கள்­தயார். அப்­போது மக்­களின் நிலைப்­பாட்டை அறிந்­து­கொள்­ளலாம். மேலும் இந்த திருத்­ததில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பணத்­துக்கு விற்­கப்­ப­டு­வதை தடுத்­துள்ளோம். தற்­போது எமது பிரே­ர­ணையை விம­ரி­சிப்­ப­வர்­களும் பணத்­துக்கு விலை­பாே­ன­வர்­க­ளாகும்.

அத்­துடன் 20ஆவது திருத்­தத்தை நாங்கள் எமது தேவைக்கு ஏற்­ற­வி­தத்தில் தயா­ரிக்­க­வில்லை. இதனை தாரிக்கும்போது பலதரப்பினருடன் கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். இதில் இன்னும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என யாரும் தெரிவித்தால் அதுதொடர்பாக கலந்துரையாட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019