20ஆவது திருத்தச் சட்­டத்தை இன்னும் பார்க்­க­வில்லை - ஜனா­தி­பதி

மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் நான் தலை­யிட்­டதன் கார­ண­மா­கவே இன்று எனக்கு இந்த பிரச்­சி­னை­களும் நெருக்­க­டி­களும் ஏற்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நான் நட­வ­டிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்­க­டி­க­ளுக்கு காரணம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அண்­மையில் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­த­போதே ஜனா­தி­பதி இதனை குறிப்­பிட்டார்.

அவர் அதன்­போது மேலும் குறிப்­பி­டு­கையில்,

எனக்கு இன்று ஏற்­பட்­டுள்ள அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் காரணம் நான் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் கை வைத்­ததே ஆகும். அத­னால் தான் இன்று அனைத்து குழப்­பங்­களும் ஏற்­பட்­டுள்­ளன. 

இதே­வேளை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் வின­வி­ய­போது அதனை தான் இன்னும் காண­வில்­லை­யென்றும் அது தொடர்பில் தான் சில விட­யங்­களை கேள்­விப்­பட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார்.

20ஆவது திருத்தச் சட்­டத்தின் வரைபை நான் இன்னும் பார்க்­க­வே­யில்லை. எனவே அது தொடர்பில் எதுவும் கூற முடி­யாது என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

இவ்­வா­றி­ருக்க சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றுமா என்ற கேள்­விக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி ஊழலற்ற புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கூறினார். அதனை நான் தற்போது உருவாக்கி வருகின்றேன் என்றும் அவர் கூறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018