2020ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதே அரசின் இலக்கு: மங்கள சமரவீர

நாடளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டளவில் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

என்டர்பிறைசெஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் பற்றி அரச வங்கிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் இந்த திட்டத்திற்காக 16 வகையிலான உத்தேச கடன் திட்டங்கள் வடிமைக்கப்பட்டிருக்கின்றன.

நிலஹரித என்ற பசுமை பொருளாதாரம் தொனிப்பொருளில் அரசாங்கம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு என்பதை விட தொழில் முயற்சியாளர்களை கொண்ட நாடாக இலங்கையை கருத முடியும். சகல இலங்கையர்களுக்கும் இதன் பங்குதாரர்களாக இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஆறு சதவீதமான தொகை கல்விக்காக ஒதுக்கப்படுவது அவசியமாகும். இந்த இலக்கை 2020ஆம் ஆண்டளவில் அடைந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழங்களுக்கு சென்றவர்கள் மாத்திரமன்றி உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய தொழில் முயற்சியாளர்களையும் இனங்காண்பது அவசியமாகும்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக ஐயாயிரத்து 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் ஊடாக அமுல்படுத்தப்படும் 100 இற்கும் அதிகமான கடன் திட்டங்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன. என்டர்பிறைசெஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் என்ற பெயரில் சகல வங்கிகளிலும் விசேட கருமபீடம் ஸ்தாபிக்கப்படுவது அவசியமாகும். மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி என்பன இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.” என்றார்.

Ninaivil

திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
திரு கந்தையா சதாசிவம் (இளைப்பாறிய Chief Clerk- AGA’s Office Nallur)
யாழ். சங்கானை
அவுஸ்திரேலியா
19 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 21, 2018
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
திருமதி ஆன் ரீட்டா ராஜேந்திரம்
யாழ்ப்பாணம்
யாழ். மானிப்பாய், கனடா
15 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 19, 2018
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018