அடக்குமுறை சட்டங்களால் புரட்சிகளை தடுத்துவிட முடியாது.!

அரசுகளின் அடக்குமுறை சட்டங்களால் ஒருபோதும் தங்கள் உரிமைகளுக்காக குரலெழுப்பும் மக்கள் புரட்சியினை தடுத்துவிட முடியாது என தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவரக்கூடிய சூழலில், தூத்துக்குடி செல்ல முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்து தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு அதிகபடியான அழுத்தங்கள் அளிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த சூழலில், நேற்றைய தினம் கடலூரில் வேல்முருகன் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படத்தினை கண்டித்து அனைத்துக்கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமா, "தம்பி வேல்முருகன் தொடர்ச்சியாக தமிழர் வாழ்வுரிமை களங்களில் உரக்க குரலெழுப்பி செயல்பட்டுவருபவர்.

அவரின் தமிழ் மக்களுக்கான உள்ளார்ந்த செயல்பாடுகளே அரசுகளை அச்சுறுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அவரை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து முடக்க நினைக்கிறது. ஆனால், மக்களுக்காக குரலெழுப்புபவர்களை ஒருபோது அடக்குமுறை சட்டங்களால் ஒடுக்கி விட முடியாது" என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018