அதிமுக அரசு செயல்பட அனுமதிக்கப்படாததன் விளைவு! ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை என சட்டமன்றத்திலேயே அதுவும் 110 விதியின் கீழேயே அறிவிப்பு! தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு திணிக்கப்பட்ட தலைமைச் செயலரால் இயக்கப்படுவதுதான் இது என குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கால நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் போய் கையை விரித்துவிட்டது அதிமுக அரசு.

ஆம். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை; காரணம் அணையில் போதிய நீர் இல்லை; நீர் வரத்தும் போதிய அளவுக்கு இல்லை என்று சொல்லிவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதையும் சட்டமன்றத்திலேயே, விவாதிக்க அனுமதி இல்லாத 110 விதியின் கீழேயே அறிவித்துவிட்டார் முதல்வர்.

ஏன் இப்படிச் செய்தார்?

வேறு வழியில்லை அவருக்கும் அவரது அரசுக்கும்.

உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், நீட் நுழைவுத் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டதைப் போல்தான் இதையும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.

தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இப்போதும் ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வழியில்லை.

குறுவை, சம்பா, தாழடி என எப்போகமும் இனி இல்லை என்பதாகவே சொல்வதாகப் படுகிறது.

காவிரி நீர் கானல் நீரானால் வேறு என்ன நடக்கும்?

மத்திய பாஜக மோடி அரசு நினைப்பதுதான் நடக்கும்; அதாவது தமிழ்நாடு பாலைவனமாக்கப்படும், இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கான கார்ப்பொரேட்டுகளின் வேட்டைக்காடாக்கப்படும்.

அதை நோக்கிய அறிவிப்புதான் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படாது என்பதும் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இது அதிமுக அரசு செயல்பட அனுமதிக்கப்படாததன் விளைவுதான் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு திணிக்கப்பட்ட தலைமைச் செயலரால் இயக்கப்படுவதுதான் இதற்குக் காரணம் என குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கைகட்டி நிற்கவைத்து, ஆளுநரை - அதிகாரிகளைக் கொண்டு ஆட்சி நடப்பதில் தேர்தல், மக்களாட்சி, ஜனநாயகம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று ஆக்கப்பட்டிருப்பதை மக்களுக்குச் சுட்டிக்காட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.


 

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018