வடக்கில் சிங்களக் குடியேற்றம்: கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆராய்வதற்குத் தீர்மானம்

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தரவுகளுடன் ஆராய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுமுன்தினம் நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.

கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் நடைபெற்று வருகின்ற விடயங்களைத் தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான நகல் வரைவில் எத்தகைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்ற விடயங்களையும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழு தன்னுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் தரவுகளுடன் மீண்டும் கூடி ஆராய்வதற்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது

Ninaivil

திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018